திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (07:47 IST)

ரஷ்ய அதிபர் தேர்தல்.. புதின் அபார வெற்றி.. 5ஆவது முறையாக மீண்டும் அதிபராக தேர்வு!

சமீபத்தில் நடந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இதையடுத்து அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவில் சர்வ வல்லமை பெற்ற தலைவராக புதிர் இருந்து வருகிறார் என்பதும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் அவர் அதிபராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்ய சமீபத்தில் தேர்தல் நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் மீண்டும் புதின் அபார வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன

பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட 88 சதவீதம் வாக்குகள் புதினுக்கு கிடைத்துள்ளதாகவும் ரஷ்யாவை பொறுத்தவரை இதுவரை ரஷ்யாவில் நடந்த தேர்தலில் அதிக சதவீத வாக்குகளை பெற்றவர் புதின் தான் என்றும் கூறப்படுகிறது

1999 ஆம் ஆண்டு முதல் அடுத்தடுத்து புதின் வெற்றி பெற்று ரஷ்யாவின் சக்தி மிகுந்த தலைவராக உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சாகும் வரை புதின் தான் ரஷ்யாவின் அதிபர் என்றும் அவரை தோற்கடிக்க யாராலும் முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva