ஜி7 நாடுகளில் இந்தியாவே இல்லை! – ஆனால் மோடியை அழைத்தது யார்?
இன்று பிரான்ஸில் நடைபெறும் வல்லரசு நாடுகளின் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வளர்ந்து வரும் நாடான இந்தியா வல்லரசு நாடுகளின் கூட்டமைப்பில் பேச இருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய 7 வல்லரசு நாடுகளின் ஜி7 கூட்டமைப்பின் சந்திப்பு பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கண்ட 7 நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்று நாட்டின் வளர்ச்சி மற்றும் பல சிக்கல்கல் குறித்தும் பேசுவார்கள். இந்த கூட்டமைப்பில் இந்தியா இல்லையென்றாலும், பிரதமர் நரேந்திர மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன்.
அங்கே பிரதமர் மோடி சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றங்கள் குறித்தும் பேச உள்ளதாக கூறப்படுகிறது. வல்லரசு நாடுகள் மட்டும் பங்குபெறும் மாநாட்டில் இந்திய பிரதமர் அழைக்கப்பட்டிருப்பது இந்தியா தனது 2020 வல்லரசு கனவை அடைவதற்கான ஒரு முன்னோட்டமாக இருக்குமோ என பலர் கருதுகின்றனர்.
வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலிலேயே இந்தியாவும், சீனாவும் நீடித்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு அடுத்தப்படியாக உள்ளது. தற்போது ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை முதல்முறையாக சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.