திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 9 மே 2024 (15:23 IST)

இலங்கையில் விரைவில் அதிபர் தேர்தல்..! தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்..!

Srilanka
இலங்கையில் வரும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.  வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்ததால்  இலங்கை மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

இதை அடுத்து இலங்கை அரசுக்கு எதிராக மிகப்பெரிய புரட்சி வெடித்தது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். 

 
இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 17ம் தேதி துவங்கி, அக்டோபர் 16ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.