1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 மே 2024 (13:44 IST)

கேதார்நாத் கோவில் நடை திறக்கும் தேதி அறிவிப்பு.. லட்சக்கணக்கில் பக்தர்கள் வர வாய்ப்பு..!

Kedarnath Donkeys
கேதார்நாத் கோவில் நடை திறக்கும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோவிலில் சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் கோவிலாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவில் நடை திறக்கும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனை தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது 
 
மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் குளிர்காலங்களை தவிர மீதமுள்ள ஆறு மாதங்களில் மட்டுமே கோவில் திறக்கப்பட்டு இருக்கும் என்ற நிலையில் மே மாதம் 10ஆம் தேதி காலை 5 மணிக்கு கோயில் திறக்கப்படும் என்று கோவில் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார் 
 
கேதாரநாக் கோயில் திறக்கப்பட உள்ளத்தை அடுத்து சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்படும் என்றும் அதற்கான பணிகள் நேற்று தொடங்கி உள்ளதாகவும் தெரிகிறது. கடந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran