திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (11:22 IST)

கர்ப்பிணியை கடித்து குதறிய நாய்கள்..

பிரான்ஸ் நாட்டில் 29 வயதான கர்ப்பிணி பெண்ணை, வேட்டை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியான வில்லர்ஸ் கோட்டரட்ஸை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பெண்ணான எலிசா பிலார்ஸ்கி, தனது செல்ல நாய்களுடன் ரெட்ஸ் காட்டுப் பகுதிக்கு நடை பயிற்சி சென்றுள்ளார்.

அப்போது அங்கே வேட்டைக்காரர்கள் வேட்டையாடும்போது மான்களை பயமுறுத்துவதற்காக வளர்த்து வரும் வேட்டை நாய்கள், அந்த கர்ப்பிணியை சூழந்து கொண்டு பயமுறுத்தியுள்ளன. அந்த பெண் உடனடியாக தனது கணவரை ஃபோனில் அழைத்து நிலைமையை கூறியுள்ளார்.

ஆனால் அவரது கணவன் வந்து பார்ப்பதற்குள் அந்த பெண்ணை வேட்டை நாய்கள் கடித்து குதறிவிட்டன. பரிதாபமாக உயிரிழந்த கிடந்த அந்த கர்ப்பிணியை பார்த்து அவரது செல்ல நாய்கள் அழுது கொண்டிருந்தன. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.