செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (14:20 IST)

வால்மார்ட்டில் மீண்டும் துப்பாக்கி சூடு..

அமெரிக்காவின் வால் மார்ட் ஷாப்பிங் மாலின் வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை, காலை 10 மணியளவில் அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தின் டங்கன் நகரில் அமைந்துள்ளது வால்மார்ட் ஷாப்பிங் மாலுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

அதில் பார்க்கிங் லாட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் சுடப்பட்டுள்ளனர் எனவும், மூன்றாவதாக துப்பாக்கியால் சுட்ட நபரே தன்னை சுட்டுக்கொண்டதாகவும் ஓக்லஹோமா போலீஸாரால் கருதப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பலியாகினர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.