ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 27 பிப்ரவரி 2017 (16:40 IST)

டிரக் டிரைவரிடம் வழி கேட்ட பைலட் (வீடியோ)

கஜகஸ்தான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டரை நெடுஞ்சாலையில் தரையிறக்கிய பறிச்சி பைலட், தான் செல்ல வேண்டிய இடம் குறித்து டிரக் டிரைவரிடம் வழி கேட்டு அறிந்தார்.


 

 
கஜகஸ்தான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென நெடுஞ்சாலையில் இறங்கியுள்ளது. அதிலிருந்து இறங்கிய பயிற்சி பைலட் சாலையில் சென்ற டிரக்கை வழிமறித்து, டிரக் டிரைவரிடம் அவர் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியை கேட்டு அறிந்தார்.
 
செல்ல வேண்டிய வழியை தவற விட்டதாகவும், எவ்வாறு செல்ல வேண்டும் என தெரியாமல் தரை இறங்கியதாகவும் என கூறப்படுகிறது. இதுகுறித்து கஜகஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியதாவது:-
 
ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கு சரியாக இடங்கள் மற்றும் புவி அமைப்புகள் குறித்து தெரிகிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக இதுபோன்று பயிற்சி அளிக்கப்படும். சரியான இடத்தை அறிந்துக்கொள்வதற்கான இந்தப் பயிற்ச்சியில் பைலட் வெற்றி பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.
 

நன்றி: Zello Kaz