1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2017 (17:58 IST)

காட்டுத்தீக்குள் விமானத்தை தில்லாக ஓட்டிய விமானி; வைரல் வீடியோ

கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க விமானி ஒருவர் விமானத்தை மிகவும் தைரியமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதியில் மிகவும் பறந்து தீயணைக்கும் சிவப்பு நிற திரவத்தை தெளித்த வீடியோ வைரலாகி உள்ளது.

 
அமெரிக்கவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பெரிய அளவில் பரவி வருகிறது. தீயை அணைக்க வீரர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 6 காட்டுத்தீயில் தாமஸ் தீ வேகமாக பரவி வருகிறது. அதைத்தொடர்ந்து லீலாக் தீ தற்போது அங்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. லீலாக் தீயின் ஒருபகுதியை விமானி ஒருவர் மிகவும் தைரியமாக அணைத்துள்ளார். இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
இதற்காக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதியில் மிகவும் தாழ்வாக பறந்து தீயணைக்கும் சிவப்பு நிர திரவத்தை தெரிளித்துவிட்டு மேல் நோக்கி பறந்தார். விமானத்தை நேரடியாக காட்டுத்தீ எரியும் பகுதிக்குள் தைரியமாக செலுத்தி பறந்துள்ளார். 
 

நன்றி: Daily Motion