திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (16:36 IST)

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஜாக்கிசான் கலக்கல் நடனம் - வைரல் வீடியோ

மோகன்லால் நடிப்பில் வெளியான வெளிப்பாடிண்டே புஸ்தகம் என்ற படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் ரசிகர்கள் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது. 


 
அந்த பாடலுக்கு ரசிகர்கள் நடனம் ஆடி வெளியான வீடியோ பிரபலமடைந்ததை அடுத்து ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமானது.
 
அதேபோல், கேரளா மாநிலத்தில் முஸ்லீம் மாணவிகள் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு பிரபல சீன நடிகர் ஜாக்கிசான் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. உண்மையில் குங்ஃபு யோகா படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் வீடியோவில், ஜிமிக்கி கம்மல் பாடலை சொருகி இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 
 
ஆனாலும், ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஜாக்கிசான் நடனமாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.