புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2022 (17:33 IST)

ரஷ்யாவுக்கு ஆதரவாக போரில் களமிறங்கிய பெலாரஸ் படை!

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிடையே கடந்த 6 நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்தும் குரல் கொடுத்து வருகின்றன
 
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்து வரும் பெலாரஸ் நாடு திடீரென இந்த போரில் கலந்துகொண்டதாகவும், பெலாரஸ் படைகள் உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
ரஷ்யா, பெலாரஸ் ஆகிய இரண்டு பக்கமும் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாடு நிலைகுலைந்து போய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாகவும் சில நாடுகள் போரில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது