1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (10:36 IST)

கடும் நீதி நெருக்கடி: அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான்?

டெக்சாஸைச் சேர்ந்த ’லிண்டன் ஸ்ட்ராட்டஜீஸ்’ என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்துடன் பாகிஸ்தான் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
 
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி புரிந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு சாம்பல் பட்டியலில் இந்நாட்டை வைத்துள்ளது. இதனால் சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதியுதவி பாகிஸ்தானுக்கு கிடைப்பதில்லை. 
 
இருப்பினும் பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருப்பதால் அடுத்து கருப்பு பட்டியலில் இந்நாடு சேர்க்கப்பட உள்ளது. எனவே, இதனை சரிசெய்யும் விதமாக டெக்சாஸைச் சேர்ந்த ’லிண்டன் ஸ்ட்ராட்டஜீஸ்’ என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்துடன் பாகிஸ்தான் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
 
இந்நிறுவனம் பாகிஸ்தான் குறித்து ட்ரம்ப் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேச இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.