1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (13:01 IST)

தாலிபன்கள் பாகிஸ்தானுக்குள் வருவதைத் தடுக்க முயற்சி

தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றும் முன்னரே அந்நாட்டுடனான எல்லையை மூடியது பாகிஸ்தான்.

 
இரு நாடுகளுக்கும் இடையிலான தோர்காம் எல்லை நுழைவை, பாகிஸ்தான் வர்த்தக மற்றும் பாதாசாரிகளின் பயண நோக்கத்துக்காகத் திறந்துள்ளது. இரு தரப்பிலும் இருந்து, நாளொன்றுக்கு சராசரியாக 6,000 பேர் முதல் 7,000 பேர் வரை இந்த எல்லை நுழைவைப் பயன்படுத்துவர். தற்போது சுமார் 50 பேர் மட்டுமே எல்லையைக் கடக்க காத்திருக்கின்றனர். 
 
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்ட பாகிஸ்தானியர்கள் ஆவர். தாலிபன் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் வந்துவிடக் கூடாது என்பதால் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் வழக்குத்துக்கும் அதிகமான நேரம் எடுத்து அவர்களைச் சோதனை செய்து, விசாரித்து பாகிஸ்தானுக்குள் அனுப்புகின்றனர். வர்த்தகம் செய்வோர், ஆஃப்கனில் சிக்கிக்கொண்டோர் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.