இந்தியா மேல் போர் தொடுத்து ரொம்ப கஷ்டப்பட்டோம்! – ஓபனாக சொன்ன பாகிஸ்தான் பிரதமர்!
பாகிஸ்தானின் தற்போதைய பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் மேற்கொண்ட யுத்தங்களால் பாகிஸ்தான் நெருக்கடிகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மக்கள் பாலிதீன் கவர்களில் எரிவாயுவை நிரப்பி செல்லும் அவலம் எழுந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் பாகிஸ்தானில் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் “ஒரு நாடு அமைதியான முறையில் வாழ்வதும், முன்னேற்றம் அடைவதும் அல்லது சண்டையிட்டு கொள்வதும் இரு நாடுகளின் விருப்பம். முன்னேறுவதா சண்டையிட்டு நேரத்தையும், வளத்தையும் வீணடிப்பதா என்பது நமது கைகளில் உள்ளது.
நாங்கள் இந்தியாவுடன் மூன்று போர்களை நடத்தியுள்ளோம். ஆனால் அவை மக்களுக்கு அதிக துன்பம், வறுமை, வேலையின்மையைதான் கொண்டு வந்தன. போரின் மூலம் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம். அமைதியாக வாழ்ந்து இந்தியாவுடன் உள்ள பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ள விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.
Edit By Prasanth.K