காஷ்மீர் விவகாரத்தால் இந்திய சினிமாவிற்கு தடையா? பாகிஸ்தானில் பரபரப்பு
சமீபத்தில் மத்திய அரசு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த 370ஆவது சிறப்பு அந்தஸ்தை நீக்கியதோடு, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்க முடிவு செய்தது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இந்தியாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது
அவற்றில் ஒன்று இந்திய சினிமாவிற்கு பாகிஸ்தானில் தடை விதிப்பது தான். முதல் கட்டமாக பாகிஸ்தானில் விற்பனையாகிக் கொண்டிருந்த இந்திய சினிமா சிடிக்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், இனிமேல் பாகிஸ்தானில் உள்ள எந்த கடையிலும் இந்திய சினிமாக்களின் சிடிக்கள் விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன
மேலும் இந்திய பொருள்களின் விளம்பரங்கள் பாகிஸ்தானில் உள்ள எந்த ஊடகங்களும் வெளிவரக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் உறவு விரிசல் அடைந்திருந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் இந்த இரு நாட்டு உறவுகளின் விரிசலை பெரிதாக்கியுளது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது