திருமணம் ஆகவில்லை என்பதை நிரூபிக்க 7 வருடம் போராடிய நடிகை
பாகிஸ்தானின் பிரபல நடிகை மீரா தான் திருமணமானவர் இல்லை என்பதை 7 வருடங்களாக போராடி நீதிமன்றம் மூலம் நிரூபித்துள்ளார்.
பாகிஸ்தான் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகை மீரா(40) சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 2009ஆம் ஆண்டு பைசலாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆதிக் உர் ரெஹ்மான், தனக்கும் மீராவுக்கும் 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும் தன்னை மீரா கணவர் என வெளிப்படையாக சொல்லாதது வருத்தமளிப்பதாகவும் கூறினார்.
மேலும் மீதா தனது மனைவி என்பதை நிரூபிக்க அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். தன்னை விவாகரத்து செய்யாமல் மீரா வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. மீரா வாழும் வீடு தனக்கு வேண்டும். வெளிநாடுகள் செல்ல மீராவுக்கு தடை விதிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து ரெஹ்மான் வழக்கு தொடர்ந்தார்.
ரெஹ்மானின் குற்றச்சாட்டுகளை மறுத்த மீரா, தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் திருமண சான்றிதழை எதிர்த்து 2010ஆம் ஆண்டில் எதிர்மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் கடந்த ரெஹ்மான் தொடர்ந்த வழக்கை லாகூர் சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குடும்பநல் நீதிமன்ற சட்டம் 1964-யின் படி மீரா வேறொரு திருமணம் செய்துக்கொள்வதை தடுக்க முடியாது. திருமணம் சான்றிதழ் உண்மையானதா, போலியானதா என இன்னும் முடிவாகவில்லை. அந்த திருமண சான்றிதழ் உண்மை என தெரியவந்தால் அதற்கான சட்ட விளைவுகளுக்கு மீரா பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இறுதியாக தனக்கு நீதி கிடைத்து உள்ளது என மீரா தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளாக போராடிய மீராவுக்கு தற்போது நீதி கிடைத்துள்ளது.