செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 10 டிசம்பர் 2021 (07:25 IST)

38 நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் வைரஸ்: உலக சுகாதார மையம் கவலை!

கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் என்ற வைரஸ் ஒரு சில நாடுகளில் மட்டும் பரவிய நிலையில் தற்போது 38 நாடுகளுக்கும் அதிகமாக பரவி விட்டது என்று உலக சுகாதார மையம் கவலையுடன் தெரிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும் ஒரு சில நாடுகளில் மூன்றாவது அலை தோன்றி விட்டது என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் திடீரென ஒமிக்ரான் என்ற வைரஸ் தென்னாபிரிக்காவில் தோன்றியது என்பதும் இந்த வைரஸ் பிரேசில், ஹாங்காங், சவுதி அரேபியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்கு வேகமாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவிய நோயாளிகளின் எண்ணிக்கை இருபதுக்கும் மேல் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளதாக உலக சுகாதார மையம் கவலையுடன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது