திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 டிசம்பர் 2018 (17:22 IST)

வேஷம் போட்ட ஒபாமா : குழந்தைகள் கொண்டாட்டம்

கிருஸ்துமஸுக்கு இன்னும்  5 நாட்களே உள்ள நிலையில் உலகமெங்கும் உள்ள கிருஸ்துவர்கள் உற்சாகத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில்  கிருஸ்துமஸ் தினத்துக்கு முன் மக்கள் வீடுவீடாக கேரல் ரவுண்டு சென்று மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள். இது பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.
கிருஸ்துமஸ் விழாவை அமெரிக்க மக்கள் கோலகலமாக கொண்டாடுவர்.முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கிருஸ்துமஸ் தாத்தா போன்று வேஷம் அணிந்து கொண்ட புகைப்படம் சமுக வலைதளங்களில் வெளியாகின்றன.
 
ஒபாமா கிருஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்து வாஷிங்டனில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு சாக்லெட் மற்றும் பரிசு பொருட்களைக் கொடுத்தார். முன்னாள் அதிபர் ஒபாமாவை கண்ட குழந்தைகள் இன்ப அதிர்ச்சி அடைந்து தம் மகிச்ச்சியை வெளிப்படுத்தினர்.