வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (12:16 IST)

அண்டர் கிரவுண்ட் எஸ்கேப்: அமெரிக்காவை எதிர்க்கும் வடகொரியர்களின் நிலை....

அண்டர் கிரவுண்ட் சுரங்க ரயில் பாதை மூலம், வடகொரியர்கள் தாய்லாந்தில் தஞ்சமடைய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 
 
வட கொரியா - அமெரிக்கா இடையே எந்நேரமும் போர் வெடிக்கக்கூடிய பதற்றம் தொடர்ந்து வருகிறது. இதனால் வடகொரியர்கள் தாய்லாந்தை நோக்கி பிறப்படதுவங்கியுள்ளனர்.
 
சராசரியாக ஒரு வாரத்திற்கு 20 முதல் 30 வடகொரியர்கள் தாய்லாந்த் வருவதாக கூறப்படுகிறது. ஆனால், தாய்லாந்தை அடைவதற்கு சீனா முழுவதும் அவர்கள் தலைமறைவாக பயணித்தாக வேண்டும். 
 
இதற்காக அண்டர் கிரவுண்ட் ரயில் பாதையை பயன் படுத்துகின்றனர். தாய்லாந்தை அடைந்துவிட்டால், அங்கிருந்து தென் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள். 
 
தென்கொரியாவில் கொரியர்கள் அனைவருமே அனுமதிக்கப்படுவதால் வடகொரியர்களுக்கும் அங்கு வாழ்வதற்கான அனுமதியுள்ளது.