அமைச்சர்கள் பலிகடா; தினகரன் எஸ்கேப்: ஐடி-யிடம் தப்பிக்க மாஸ்டர் ப்ளான்!!
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போது வருமான வரித்துறை அதிகாரிகளை சில அமைச்சர்கள் மிரட்டியுள்ளனர்.
ஆர்கே நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி ரெய்டு நடத்தினர்.
அப்போது விஜயபாஸ்கர் வீட்டுக்கு சென்ற அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் மற்றும் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
இதனால் அவர்கள் மீது வருவாய் துறை அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. புகாருக்கு உட்படுத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் எந்நேரமும் விசாரணை செய்து கைது செய்யப்படலாம். இதனால் அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஆனால் டிடிவி தினகரனோ, வருமான வரித்துறை சோதனைக்கு இடையூறு செய்ததாக கூறி அமைச்சர்களை கைது செய்யட்டும். அப்போதுதான் பாஜகவை விமர்சித்து நல்ல இமேஜ் பெற முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.
இதை கேள்விபட்ட அமைச்சர்கள் அதிர்ந்து போயுள்ளதாகவும், இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்படாத காரணத்தால் முன்ஜாமீன் கூட கேட்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவி வருகிறது.