புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2018 (15:48 IST)

டிரம்ப் தற்பெருமைக்கு பதிலடி கொடுத்த வடகொரியா!

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது.
 
இருப்பினும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவை ஒழுக்கம் கெட்ட நாடு என அமெரிக்கா விமர்சனம் செய்ததற்கு வடகொரியா பதிலளித்துள்ளது. 
 
அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதில் தனது நிர்வாகம் வலிய, பாதுகாப்பான, பெருமைமிகு அமெரிக்காவை உருவாக்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.
 
மேலும், அமெரிக்கா குறித்த கனவை வாழ்வதற்கான நேரம் வந்துவிட்டது எனவும் தெரிவித்தார். அதோடு, வடகொரியாவை ஒழுக்கம் கெட்ட நாடு என விமர்சித்தார். 
 
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரிய அமைச்சக செய்தித் தொடர்பாளர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது,  டிரம்ப் தற்பெருமை அடித்துக் கொள்கிறார். வடகொரியாவை நோக்கி விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறார். மேலும், அணு ஆயுதங்கள் மூலம் தங்களை பாதுகாத்துக் கொண்டு, பிறநாடுகளை மிரட்டுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.