இயற்பியலில் சாதித்த மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு...
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலில் சாதனை புரிந்தவர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று விஞ்ஞானிகளும் இயற்பியலில் சாதனை புரிந்தவர்கள் ஆவர்.லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்டதற்காகா 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்தர் அஸ்கின் (அமெரிக்கா), ஜிரார்டு மவுரு (பிரான்ஸ்), டோனா ஸ்டிக்லேண்டு(கனடா) ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலத்துக்கு பிறகு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெரும் மூன்றாவது பெண்மணி டோனா ஸ்டிக்லேண்டு ஆவார்.