1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2017 (06:28 IST)

நெடுவாசல் போராளிகளுக்கு நியூயார்க் தமிழர்கள் ஆதரவு

தமிழகத்தில் உள்ள புதுகோட்டை பகுதியில் உள்ள நெடுவாசலில் கார்போஹைட்ரேட் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு குவிந்து கொண்டு வருகிறது. கமல் உள்பட பல திரையுலக பிரமுகர்களும் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.



 





இந்நிலையில் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் தமிழர்களும் தற்போது இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். நேற்று நியூயார்க்கில் உள்ள "தமிழ்ஸ் ஆப் கிரேட் ராச்செஸ்டர் " என்ற தமிழ் மக்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் #SaveNeduvasal என்ற பதாகைகளை கையில் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த போராட்டம் காரணமாக நியூயார்க்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நியூயார்க் தமிழர்கள் மட்டுமின்றி லண்டன் உள்பட உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களும் விரைவில் நெடுவாசல் மக்களுக்காக குரல் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.