ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (17:00 IST)

உலகிலேயே முதன் முதலாக ஊரடங்கை நீக்கிய நாடு!

நியுசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அங்கு முற்றிலுமாக ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவி இதுவரை பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா, ஜெர்மன், ஸ்பெயின் போன்ற பெரிய நாடுகளே வைரஸ் தொற்றைத் தடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றன. இந்நிலையில் சிறிய நாடான நியுசிலாந்து கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த 100 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பில்லாமல் இருந்து வருகிறது நியுசிலாந்து.

இதையடுத்து அங்கு படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்ப ஆரம்பித்துள்ளது. மக்கள் தொகைக் கம்மியாகக் கொண்ட நாடான நியுசிலாந்தில் தற்போது ஆக்லாந்து பகுதியைத் தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் ஊரடங்கை நீக்கியுள்ளார் அந்த நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்.