Daily Horoscope
✕

பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கண்டனம்

Written By Mahendran
Updated: திங்கள், 22 செப்டம்பர் 2025 (12:16 IST)
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு உருவாகாது" என்று  பகிரங்கமாக அறிவித்துள்ளார். 
 
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
 
நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் நிலத்தின் மையத்தில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு, நான் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் பதில் அளிக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
 
கடந்த அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்கள், "பயங்கரவாதத்திற்குப் பரிசு" வழங்குவதாக அவர் சாடினார். "ஜோர்டான் நதிக்கு மேற்கே எந்த பாலஸ்தீன அரசும் இருக்காது. பல ஆண்டுகளாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு மத்தியிலும், ஒரு பயங்கரவாத அரசு உருவாவதை நான் தடுத்து வருகிறேன். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சமீபத்தில் அறிவித்திருந்தன. இந்த அறிவிப்பு, இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராகுல் காந்தி மரணம் குறித்து சர்ச்சை பதிவு.. கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு...

டெலிவரி ஊழியர்கள் என்ன கொத்தடிமைகளா? பாஜகவுக்கு ராகுல் காந்தி கேள்வி..

வங்கக்கடலில் புயல் சின்னம் தோன்றியும் சென்னைக்கு மழை இல்லையா? என்ன சொல்கிறது வானிலை அறிக்கை...

பெயரில் ஒரு எழுத்து, இனிஷியல். பிறந்த தேதி தப்பாக இருந்தால் விண்ணப்பம் ரத்து: TNTET-2 தேர்வுக்கு நிபந்தனைகள்..

அரிசி, பருப்பை அளவுக்கு மீறி வைத்திருந்தால் ஜெயில்.. பதுக்கல்காரர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments