வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 மே 2020 (07:31 IST)

உலக அளவில் 52 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் படுமோசம்

உலக அளவில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவில் 51.89 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,89,488 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,78,561ஆக உயர்ந்துள்ளதாகவும், உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,34,092 ஆக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
 
உலக அளவில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் 16.20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்லது. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 16,20,767 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96,314 ஆக அதிகரித்துள்ளதாக 
 
அமெரிக்காவை அடுத்து  ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 317,554 என்றும், பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 310,921 என்றும், ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 280,117 என்றும், இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250,908 என்றும், இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228,006 என்றும், பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 181,826 என்றும், ஜெர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 179,021என்றும் உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது