1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (07:47 IST)

25 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை: மீண்டு வரும் இத்தாலி

25 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை:
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,81,165ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்குவதால் மனித இனமே அச்சத்தில் உள்ளது.
 
இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,70,370ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,46,248ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 784 பேர்களுக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் மொத்தம் 792,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் கொரோனாவுக்கு 42,514 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 72,389 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 200,210 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கொரோனாவுக்கு 20,852 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்நாட்டில் 181,228 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கொரோனாவுக்கு 24,114 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 18,539 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கொரோனாவுக்கு 592 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் தெரிந்ததே