வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (12:31 IST)

மியான்மர் வைர சுரங்கத்தில் மண்சரிவு! – 100 பேர் மாயம்!

மியான்மரில் உள்ள வைர சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவால் 100 ஊழியர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மர் நாட்டில் மாணிக்க கற்கள் மற்றும் வைரங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த சுரங்கங்களில் பல பேர் பணியாற்றி வரும் நிலையில் சில சமயங்களில் நிலச்சரிவால் விபத்துகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது.

கடந்த 2020ம் ஆண்டு ஜேட் வைர சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 146 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மற்றுமொரு மாணிக்க கல் வெட்டும் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் அதிகமான ஊழியர்கள் சிக்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் மியான்மரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.