புழுக்கள் நிறைந்த காரில் மகளை மறைத்து வைத்த தாய்
புழுக்கள் நிறைந்த காரின் பின் பெட்டியினுள் தன் குழந்தையை 23 மாதங்கள் மறைத்து வைத்திருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரோசா மரியா டி க்ரூஸ் என்ற பெண், தன் மகள் செரினாவை, ஒரு பயன்படுத்தப்படாத அறையில் போசோ 307 காரில் இரண்டு ஆண்டுகள் வைத்திருந்துள்ளார்.
அவர் தன் கணவர் மற்றும் 3 குழந்தைகளிடம் இருந்து செரினாவை மறைக்க இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது 7 வயதாகும் செரினா உணர்ச்சி இழந்ததினால், பலவீணத்தோடும், ஆட்டிஸத்துக்கான குணங்களோடும் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.