1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (14:18 IST)

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஒரு மணி முடங்கியதால் பல்லாயிரம் கோடி நஷ்டம்: அதிர்ச்சியில் மார்க்..!

நேற்று இரவு திடீரென சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியதால் உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் கடும் அவதிப்பட்டனர். ட்விட்டர் உள்பட மற்ற அனைத்து சமூக வலைதளங்களும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இயங்கிய நிலையில் மார்க் அவர்களுக்கு சொந்தமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மற்றும் திடீரென முடங்கியது. 
 
இதனை அடுத்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு சில மணி நேரங்களில் மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் ஒரு மணி நேரம் முடங்கியதால் சுமார் 23 ஆயிரத்து 127 கோடி அந்நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ப்ளூம்பெர்க் குறியீட்டில் மார்க் அவர்களின் சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் 2.7 பில்லியன் டாலர் குறைந்து தற்போது 176 பில்லியன் டாலராக உள்ளது. இருப்பினும் உலகில் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் தக்க வைத்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.
 
Edited by siva