வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2023 (22:40 IST)

மிக்ஜாம் புயலால் சரணாலயத்தில் உள்ள நாய்கள் பாதிப்பு- திரிஷா கவலை

மிக்ஜாம் புயலால் தங்கள் சரணாலயத்தில் உள்ள நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை திரிஷா கூறியுள்ளார்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்று  வெள்ளத்தால் ஒட்டுமொத்த சென்னையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் தங்கள் சரணாலயத்தில் உள்ள நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை திரிஷா கூறியுள்ளார்.

மேலும், பாதிப்புகளை சரிசெய்ய  நிதி தேவைப்படுவதாகவும், புளூ கிராஸ் இந்தியா அமைப்பு பதிவிட்ட வீடியோவை தன் இன்ஸ்டா ஸ்டோரியாவில் பகிர்ந்து நடிகை திரிஷா வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகை திரிஷா, விஜய்யுடன் இணைந்து நடித்த லியோ சமீபத்தில் ரிலீஸாகி வசூல் சாதனை படைத்தது. அடுத்து, நடிகர் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.