வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 20 ஜூன் 2019 (14:43 IST)

பெண்ணை அடித்து விளாசிய ராட்டினம் – அதிர்ச்சி வீடியோ

மெக்ஸிகோவில் ராட்டினம் தலைகீழாக செல்லும்போது பெண் ஒருவர் தவறி கீழே விழுந்தார். மறுபடி கீழே வந்த ராட்டினம் அவரை அடித்து வீசியது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

மெக்சிகோவின் ஜுவாரஸ் பகுதியில் உள்ள கேளிக்கை பூங்காவில் பலவிதமான ராட்டினங்கள் உள்ளன. அதில் கோண்டலா என்னும் தலைகீழாக சுற்றும் ராட்டினம் மிகவும் பிரபலம். ஊஞ்சல் போல ஆடும் இந்த ராட்டினமானது கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரித்து கடைசியாக தலைகீழாக உயர்ந்து மீண்டும் தரைக்கு திரும்பும்.

இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல பலர் ஏறினர். வழக்கம்போல கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்த கோண்டலா கடைசியாக தலைகீழாக உயர்ந்தது. அப்போது அதிலிருந்த பெண் ஒருவர் ’தொப்’ என்று கீழே விழுந்தார். அவர் நிதானித்து எழுவதற்கும், அதிவேகத்தில் கீழே வந்த ராட்டினம் அவரை அடித்து வீசியது. அவர் பறந்து சென்று வளாகத்திற்கு வெளியே விழுந்தார். இந்த சம்பவம் பார்ப்பவர்களை கதிகலங்க செய்தது.

அந்த பெண்ணுக்கு ஆனது என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அந்த பகுதியின் மேயர் அர்மாண்டோ கபாடா அந்த கேளிக்கை பூங்கா இழுத்து மூடப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள ராட்டினங்கள் எந்தவித அனுமதியும் இல்லாமல் இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.