Daily Horoscope
✕

மெக்சிகோவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ஒருவர் பலி!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (08:24 IST)
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க கண்டத்தின் தெற்கு நாடான மெக்சிகோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.05 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது.

மைக்கோன் மாகாணத்தின் எல்லைக்கு அருகே 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடடங்கள் குலுங்கின. நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னதாக தைவானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது மெக்சிகோவிலும் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

உச்சநீதிமன்ற உத்தரவு!.. விஜயின் அடுத்த மூவ்!.. கன்பார்ம் பண்ணிய திருமா!...

AI-யால் வந்த வினை!.. SAP சாஃப்ட்வேர் நிறுவனத்திலிருந்து 10 ஆயிரம் பேர் நீக்கம்...

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்!.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது..

மாநில அரசின் தோல்வியா?.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோட்டைவிட்ட தவெக அரசு!...

உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா.. மின்கம்பியில் பதாகை உரசி 3 இளைஞர்கள் பலி..

அடுத்த கட்டுரையில்
Show comments