வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 2 ஜனவரி 2019 (10:10 IST)

2019ஆம் ஆண்டின் முதல் குழந்தை இதுதான்

2019ஆம் ஆண்டு நேற்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டின் முதல் குழந்தை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

புத்தாண்டு பிறந்த ஒரே நொடியில் அதாவது 12.00.01 மணியில் அயர்லாந்து நாட்டில் உள்ள டிரோஹ்டே என்ற நகரத்தில் பிறந்த குழந்தை தான் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து நாட்டில் உள்ள டிரோஹ்டே என்ற நகரத்தில் மைக்கேல் மாண்டாஹ் மற்றும் சிமன் காக்ஸ் ஆகிய தம்பதிகளுக்கு பிறந்த பெண் குழந்தைதான் இந்த ஆண்டின் முதல் குழந்தை என்றும், இந்த குழந்தை 3.8 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் இந்த குழந்தை பிறந்த மருத்துவமனையான லேடி ஆப் லார்ட்ஸ் என்ற மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் குழந்தைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.