ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (10:43 IST)

காதலியைக் கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூரன் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம் !

அமெரிக்காவின் இண்டிகா மாகாணத்தில் வசித்து வந்த டாமி எனும் பெண்ணை அவரது காதலரான ஜோசப் கொன்று அவரது உடல் பாகங்களைத் தின்றுள்ளார்.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் வசித்து வருகிறார் டாமி என்னும் பெண். இவருக்கு ஜோசப் எனும் காதலன் உள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஜோசப் இதற்கு முன்னதாக சிறைக்கு சென்று திரும்பியதை டாமியிடம் மறைத்துள்ளார்.

இதைக் கண்டுபிடித்த டாமி அவர் எதற்காக சிறைக்கு சென்றார் என்பதை விசாரித்துள்ளார். அதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜோசப், தனது முன்னாள் காதலி கர்ப்பமாக இருக்கும்போது கொலை செய்தது தெரிந்துள்ளது. இதனால் ஜோசப்பைத் தன்னைவிட்டு விலகி செல்ல சொல்லியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜோசப் டாமியைக் கடத்தியுள்ளார். டாமியை சில நாட்களாகக் காணாததால் அவரது அலுவலக நண்பர்கள் அது பற்றி போலிஸில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து ஜோசப்பை போலிஸார் கண்டுபிடிக்க அவர் டாமியைக் கொலை செய்ததை ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் அவரது மண்டை ஓட்டை உடைத்து மூளையை பச்சையாக தின்றதாகவும், இதயம் நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளை சமைத்து சாப்பிட்டதாகவும் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.