போதை மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்: 41 வயது நபருக்கு 15 ஆண்டுகள் சிறை!
பெண் ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 41 வயதான நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பிரான்ஸ் நீதிமன்றம்.
கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரான்சின் ஒரு காட்டு பகுதியில் பெண் ஒவரின் சடலம் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. உறைந்த நிலையில் நிர்வாணமாக சந்தேகத்துக்குரிய நிலையில் இருந்த அந்த பெண்ணின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
மருத்துவ பரிசோதனையின் முடிவில், அந்த பெண் போதை மருந்து கொடுக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்னர் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் அந்த பகுதியில் பத்திரிக்கை விநியோகம் செய்யும் 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் தொடர் விசாரணைகளுக்கு பின்னர் அந்த நபர்தான் குற்றவாளி என்பது நிரூபனமாகியது. இதனையடுத்து அந்த நபருக்கு நேற்று 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இறந்து போன அந்த பெண் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.