செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 20 டிசம்பர் 2017 (16:16 IST)

ஏலியனிடம் கற்பை இழந்த ஆண்; அதுவும் 17 வயதில்...

இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழும் பூமியில் மட்டும் தான் உயிரினம் உள்ளதா? இல்லை நம்மை போன்று வேறு கிரகத்தில் உயிரினம் இருக்குறாதா? என்பது விடை தெரியாத கேள்வி. 
 
ஏலியன்ஸ் குறித்து நாசா தற்போதைய சூழலில் எதையும் உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் உயிர்கள் வாழ்வதற்கான தகுதியுடைய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதால், வேற்று கிரகவாசிகள் இருக்கலாம் என்ற கூற்றும் வலுவடைந்து வருகிறது.    
 
இந்நிலையில், டேவிட் ஹக்கின்ஸ் என்ற அமெரிக்க முதியவர் ஒருவர் ஏலியன் பெண் ஒன்றைதான் திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த பெண்ணுடன் அவருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்காவில் உள்ள நியூசெர்சி மாகாணத்தில் வாழ்ந்து வரும் இவர் இது குறித்து கூறியதாவது, ஜார்ஜியாவில் எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுது 8 வயது. அப்போதுதான் நான் அந்த ஏலியன் பெண்ணை பார்த்தேன். நானும் அவளும் பேசினோம். எனது 17 வயதில் நான் அவளிடம் என் கற்பை இழந்தேன். என்னை வேற்றுகிரகத்துக்கு அவள் அழைத்து சென்றாள். குழந்தைகளும் அவளிடத்தில்தான் இருக்கின்றன என்று கூறி அவர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.