புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 மே 2022 (11:51 IST)

மகாராஷ்டிராவில் 7 பேருக்கு புதிய வகை ஒமிக்ரான்! – மற்ற மாநிலங்களுக்கும் பரவுமா?

தென்னாப்பிரிக்காவில் பரவியுள்ள புதிய வகை ஒமிக்ரான் மகாராஷ்டிராவில் 7 பேருக்கு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு வேரியண்டுகள் தொடர்ந்து பரவி பாதிப்பை அதிகரித்து வருகின்றன. டெல்டா, ஒமிக்ரான் வகை கொரோனாக்களில் இருந்து உலகம் மீண்டுள்ள நிலையில் தற்போது ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கியுள்ள புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா மாதிரிகள் பரிசோதனையில் 4 பேருக்கு பி.ஏ.4 வகை ஒமிக்ரானும், 3 பேருக்கு பி.ஏ.5 வகை ஒமிக்ரானும் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த புதிய வகை பாதிப்பு உள்ளவர்களில் 3 பேர் கேரளா, கர்நாடகாவுக்கு சில நாட்கள் முன்னதாக பயணித்ததாகவும் தெரிய வந்துள்ளது.