காந்தியடிகள் சிலைக்கு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மரியாதை!
தமிழ்ச் செம்மல் மேலை பழனியப்பன் மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சதுக்கத்தில் உள்ள தேசப்பிதா காந்தியடிகள் சிலைக்கு போக்குவரத்து காவல்துறை அதிகாரி மாரிமுத்து, மெஜஸ்டிக் சி.வி.குமார் தாஸ் வேல்ராஜ், அகல்யா மெய்யப்பன், பிளாட்டினம் கணேஷ், அரசு கலைக் கல்லூரி இளம் அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவித்து வரும் ஆண்டு முழுவதும் காந்தியடிகள் பிறந்த நாளை விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் கொண்டாட உறுதி ஏற்கப்பட்டது அரிமா , இளம் அரிமா உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர் தொடர்ந்து காமராசர் சிலை காந்தி பூங்காவிலும் விழா கொண்டாடினர்