1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (12:27 IST)

விமான நிலையம் அருகே மின்னல் தாக்கி விபத்து....162 பேர் படுகாயம்..சிறுவன் பலி

uzbekistan
உஸ்பெகிஸ்தானில் விமான நிலையம் அருகே மின்னல் தாக்கி ஏற்பட்ட விபத்தில் 162 பேர் படுகாயமடைந்தனர்.

உஸ்பெகிஸ்தான் தலை நகர் தாஷ்கண்டில் இடி,  மின்னலுடன் மழை பெய்தபோது, விமான நிலையம் அருகே  தொழிற்சாலையில் மின்னல் தாக்கியது.

இதில், தொழிற்சாலையில் இருந்த வெடிமருந்து கிடங்கு அதிக சப்தத்துடன் வெடித்து, தீ அங்குள்ள பகுதிகளுக்கு பரவியது.

இந்த விபத்து பற்றி  கேள்விப்பட்ட தீயணைப்புத் துறையினர் பல மணி  நேரம் போராட்டத்திற்குப் பின்னர்,  தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் சிறுவன் உயிரிழந்தான். இவ்விபத்தில் 162 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்