வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (23:35 IST)

டிரம்ப்பை பழிவாங்குவோம்...ஈரான் அதிபர் டுவீட்டால் சர்ச்சை

சமீபத்தில் அமெரிக்க நாட்டின்  46 வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்பதவியேற்பு விழாவுக்கு வராமல் புளோரிடாவிலுள்ள தனது மாளிகைக்குச் சென்றுவிட்டார்.

கோலாகலமாக நடைபெற்ற இப்பதவியேற்பு விழாவில் பேசிய அதிபர் ஜோ பிடன், அமெரிக்கா அமைதி வழிக்குத் திரும்பும் எனத் தெரிவித்தார்.

 கடந்த ஆண்டுல் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரின் கொலை, இரான் நாட்டில் ராணுவத் தளபதி மீதான அமெரிக்கப் படையின் தாக்குதல் போன்றவற்றால் அமெரிக்க நாட்டின் மீது பெரும்  பிரச்சனைகள் சூழ்ந்திருந்தது.

தங்கள் நாட்டு ராணுவத் தளபதி காசிம்  சுலைமான் அமெரிக்க ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு டிரம்ப் தக்க விலை கொடுக்க வேண்டுமென அந்நாட்டு அதிபர் பகிரங்கமாக பேசி வந்தநிலையில், இன்று டிரம்பை பழிவாங்கியே தீருவோம் என ஈரான் நாட்டு டுவீட் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.