செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (15:13 IST)

யார்ரா அது ஃப்ளைட் றெக்கையில நிக்கிறது!? – பகீர் கிளப்பிய இளைஞர்!

அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் விமான நிலையத்தில் விமான இறக்கையின் மீது அமர்ந்து இளைஞர் ஒருவர் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் விமான நிலையத்திலிருந்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று போர்ட்லேண்ட் செல்ல தயாரானது. விமானம் பறப்பதற்காக ஓடுபாதையில் சென்றபோது விமான இறக்கை மீது ஒருவர் அமர்ந்திருப்பதை கண்ட பயணிகள் கூச்சலிட்டனர். இதனால் உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது.

பிறகு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அவர்கள் விரைந்து வந்து அந்த இளைஞரை இறங்கி வருமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் இறங்க மறுத்ததால் போலீஸ் அதிகாரி ஒருவர் இறக்கை மீது ஏற அதனால் பயந்த இளைஞர் தவறி கீழே விழுந்தார். இதனால் காயமடைந்த அவரை போலீஸார் கொண்டு சென்றுள்ளனர்.

இறக்கை மீது இருவர் ஏறியதால் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பதால் விமானத்தை சோதனை செய்வதன் பொருட்டு விமான பயணத்தை அலாஸ்கா ஏர்லைன்ஸ் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இளைஞர் இறக்கை மீது அமர்ந்திருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.