1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 10 பிப்ரவரி 2018 (16:46 IST)

துரத்தி அடிக்கப்பட்ட டிரம்ப் - கிம்: தென் ஆப்ரிக்கா குளிர்கால ஒலிம்பிக்கில் சர்ச்சை...

தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் 2018 போட்டிகள் நேற்று கோலாகலமாக துவங்கின. இந்த போட்டிகள் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் வரும் 25 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. 
 
இதன் துவக்க விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கலந்து கொண்டார். மேலும், தென்கொரிய அதிபர் மூன் ஜே உள்பட அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கலந்து கொண்டனர்.
 
ஆனால், இந்த நிகழ்வின் போது டிரம்ப் மற்றும் கிம் ஒருவர் மீது ஒருவர் கை போட்டு கொண்டு வந்தார்கள். இதை பார்த்தவுடன் தென் கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை விரட்டி அடித்தனர். 
 
ஆம், இரு நண்பர்கள் அமெரிக்க மற்றும் வடகொரிய அதிபர்களை போல் உருவ அமைப்பை கொண்டவர். அதோடு அவர்களை போல் மேக் அப் போட்டு வந்திருந்தனர். இதை கண்டுபித்ததால் நிகழ்ச்சியில் பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக இருவரையும் வெளியே துரத்தியுள்ளனர்.