திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 மே 2022 (14:59 IST)

அமெரிக்கா முழுவதும் துப்பாக்கியை தடை செய்யப்போகிறேன்! – ஜோ பைடன் அதிரடி!

அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிசூடு நடந்த நிலையில் விரைவில் அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர உள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞர் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 18 மாணவர்கள் 1 ஆசிரியர் உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரம் மீது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை குறைக்க துப்பாக்கி சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது நீண்ட காலமாக வெறும் விவாதமாக மட்டுமே இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “டெக்ஸாசில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மோசமான ஒன்று, மற்ற நாடுகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறைவாகவே நடக்கின்றன. ஆனால் அமெரிக்காவில்தான் இது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. ஆயுதக்கட்டுப்பாடு குறித்து அமெரிக்க இதுவரை எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறோம். நாம் விரைவாக செயல்பட வேண்டிய நேரம் இது. துப்பாக்கி சட்டத்தை நிறைவேற விடாமல் தடுத்து தாமதம் செய்பவர்களை மறக்க மாட்டோம்” என பேசியுள்ளார்.