இந்தியா, ரஷ்யாவை அடுத்து நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான்.. தேதி அறிவிப்பு..!
இந்தியா மற்றும் ரஷ்யாவை அடுத்து நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஜப்பான் நாடு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகள் சமீபத்தில் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது. இதில் ரஷ்யாவின் விண்கலம் நிலவில் மோதி தோல்வி அடைந்த நிலையில் இந்தியாவின் விக்ரம் லேண்டெர் இன்று மாலை 6 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு ஸ்லிம் என்ற விண்கலத்தை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதனால் இந்தியா ரஷ்யாவுக்கு அடுத்து மூன்றாவது நாடாக ஜப்பான் நிலவை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran