இன்று மாலை நிலவில் தரையிறங்குகிறது சந்திரயான் 3.. கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு?
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் இன்று மாலை நிலவில் தரையிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ஒருவேளை தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் அதிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை 06.04 மணிக்கு தரையிறங்க இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
இதற்கான ஆயத்த பணிகள் தயாராக இருப்பதாகவும் நிலவில் தரை இறங்குவதில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது என்று எதிர் பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒருவேளை விக்ரம் லேண்டர் தரை இறங்குவதில் இன்று ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக தரையிறங்கும் நடவடிக்கை வரும் 27ஆம் தேதிக்கு மாற்றப்படும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
இந்திய விஞ்ஞானிகளின் மிகப்பெரிய சாதனையான நிலவில் தர இறங்கும் விக்ரம் லேண்டர் நிகழ்வு இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva