செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 4 அக்டோபர் 2016 (12:02 IST)

குழந்தை இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ரோபோ குழந்தை

குழந்தை இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்கவும் வெறுமையை விளக்கவும் ஜப்பானில் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 
ஜப்பானில் அதிக அளவில் ரோபோகளின் பயன்பாடு உள்ளது. அவை ஆஸ்பத்திரிகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில் குழந்தை இல்லா தம்பதிகளின் குறையை போக்க  குழந்தை ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 
இதற்கு ‘கிரோபோ மினி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவை பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர் வடிவமைத்துள்ளார்.
 
இந்த குழந்தை ரோபோ அழகாக கண் சிமிட்டுகிறது. குழந்தை போன்று மழலை குரலில் பேசுகிறது. சிரிக்கிறது, அழுகிறது. இதன் விலை ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது.