வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (18:25 IST)

ரஷ்ய விமானங்கள் பறக்க தடை: இத்தாலி அறிவிப்பு

ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளியில் பறக்க தடை என இத்தாலி நாடு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளிடையே போர் நடந்து வரும் நிலையில் ரஷ்ய நாட்டிற்கு கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே பெல்ஜியம் டென்மார்க் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டின் வான்வெளியை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்துள்ள நிலையில் தற்போது இத்தாலியும் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது 
 
ஒட்டுமொத்த எதிர்ப்பு  காரணமாக தனது போர் முடிவில் இருந்து ரஷ்யா பின்வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது