1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 21 அக்டோபர் 2023 (10:49 IST)

தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்? பொதுமக்கள் அகற்றப்படுவதால் பதட்டம்..!

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும்  ஹமாஸ்  தீவிரவாத அமைப்புக்கு இடையே கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
காசா மற்றும் லெபனான் எல்லை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் பொதுமக்களை அகற்றும் பணி முடிவடைந்ததும் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தாசா பகுதிகள் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருவதாகவும்  பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்குதல் தாக்குவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன
 
ஹமாஸ்  தீவிரவாதிகளை அடக்குகிறோம் என்ற பெயரில் பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று இஸ்ரேல் நாட்டிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran