வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (07:31 IST)

இஸ்ரேல் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கியது ஈரான்.. போர்ப்பதட்டம் அதிகரிப்பு..!

கடந்த சில நாட்களாக ஈரான் மீது இஸ்ரேல் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் பதில் தாக்குதல் தொடங்கி விட்டதாக கூறப்படுவதால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இஸ்ரேல் மீது ட்ரோன் ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கி உள்ளதாகவும் சிரியாவில் தங்களுடைய தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா இதில் விலகியே இருக்க வேண்டும் என ஈரான்  எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலின் ராணுவ தளங்களில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும், பெரிய அளவில் சேதம் என ஈரானும் கூறியுள்ளன
 
இந்த நிலையில் அண்டை நாடுகளான ஜோர்டான், ஈராக், லெபனான் தங்களது வான் பரப்பை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளன. அதேபோல் ஈரானின் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம். மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரிய அளவில் மோதல் நிகழாமல் தடுக்க இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தவும் கோரிக்கை
 
இஸ்ரேல் மீதான தாக்குதலை அடுத்து தேசிய பாதுகாப்புக் குழுவுடன் அமெரிக்க அதிபர் பைடன் ஆலோசனை செய்துள்ளார். இந்நிலையில், பைடனின் பலவீனமான செயல்பாடே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலுக்கு காரணம் என முன்னாள் அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
 
ஈரானின் தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம். இஸ்ரேல், ஜோர்டான், ஈராக் உடன் பிரிட்டன் துணை நிற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva