வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (10:58 IST)

உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கோம்! - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் உலக நாடுகள்

இந்தியாவிலிருந்து மருந்துகள் ஏற்றுமதிக்கான தடையை விலக்கி உலக நாடுகளுக்கு மருந்து அளித்துள்ளதற்காக உலக நாடுகள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வருகின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. உள்நாட்டில் மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் விதமாக வெளிநாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.

இந்நிலையில் தங்களுக்கு மருந்து கொடுத்து உதவ வேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல கேட்டுக்கொண்டன. அதனால் தடையை விலக்கிக்கொண்ட மத்திய அரசு அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு மருந்து பொருட்களை அனுப்பியுள்ளது. இருநாட்டு அதிபர்களும் இதற்காக பிரதம்ர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

இஸ்ரேலில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மருந்து பொருட்கள் வழங்க கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் 5 டன்கள் அளவில் விமானம் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தக்க சமயத்தில் இந்தியா செய்த இந்த உதவியை மறக்க மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.